திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்திற்கு பக்தர்கள், பொதுமக்கள் வர வேண்டாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. முருகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக ஊரடங்கு சில தளர்வுகளுடன் நடைமுறையில் இருந்து வருகிறது. கொரோனா பரவல் கட்டுப்படுத்த தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால், திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் நடைபெறும் நாட்களான (15.02.2022) இரவு 10.30 முதல் (16.02.2022) இரவு 11.30 வரை கிரிவலம் வருவதற்கு அனுமதி கிடையாது , கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் கட்டுப்படுத்தவும், பொதுமக்களை பாதுகாக்கவும் எடுக்கப்பட்டுள்ள மேற்கண்ட நடவடிக்கைக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.