திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ் அவர்கள் நேற்று (06.03.2025) போளூர் வட்டம், மொடையூர் அண்ணாமலை பொறியியல் கல்லூரியில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தமிழ்நாடு மாநில தகுதி தேர்வு நடைபெறவுள்ள மையத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் முதன்மை கல்வி அலுவலர் திரு.சுவாமி முத்தழகன் மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

