திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மார்ச் 21 (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
- 30+ முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 500+ வேலைவாய்ப்புகளை வழங்க உள்ளன.
- 8வது, 10வது, +2, பட்டம், முதுநிலை, பொறியியல், ITI, பாலிடெக்னிக் முடித்தவர்கள் பங்கேற்கலாம்.
- ஆவணங்கள்: புகைப்படம், குடும்ப அட்டை, ஆதார், ஜாதிச் சான்று, கல்விச் சான்றிதழ்கள்.
- முன்பதிவுக்கு: 04175-233381 தொடர்பு கொள்ளலாம்.