TNPSC எக்சிகியூட்டிவ் ஆபீசர் கிரேடு-III பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை TNPSC தேர்வாணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tnpsc.gov.in – இல் வெளியிட்டுள்ளது. இப்பதவிக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் 19.05.2022 முதல் 17.06.2022 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைய அறக்கட்டளைச் சட்டம், 1959 (தமிழ்நாடு சட்டம், 22, 1959) இன் ‘பிரிவு 10’ இன் படி இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.