தமிழ்நாட்டில் 9 – ம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் ரத்து!

தமிழகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு விருப்பப்பாடமாக தொழிற்கல்வி பாடம் அறிமுகப்படுத்தப்பட்டது. மத்திய அரசின் நிதியில் கடந்த 2018-ம் ஆண்டு 67 அரசு மேல்நிலைப்பள்ளிகளில், ரூ.3.55 கோடியில் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி திட்டம் செயல்படுத்த தமிழக அரசு அறிவித்து அதற்கான அரசாணை வெளியிட்டது.

அதன்படி, 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தையல் பயிற்சி, அழகுக்கலை, பேஷன் டெக்னாலஜி, வேளாண் பொறியியல் உள்ளிட்ட தொழிற்பயிற்சி வழங்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாட்டில் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதாவது, ‘நடப்பு கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தொழிற்கல்வி பாடம் இருக்கும். 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள 5 பாடங்கள் மட்டுமே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.