மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 20000 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள அசிஸ்டன்ட் ஆடிட் ஆபிஸர், அசிஸ்டன்ட் செகிஷன் ஆபிசர், இன்கம் டேக்ஸ் இன்ஸ்பெக்டர், டிவிஷ்னல் அக்கவுண்டன்ட், சப் – இன்ஸ்பெக்ட்டர், ஆடிட்டர், அக்கவுண்டன்ட், வரிவிதிப்பு அசிஸ்டன்ட் போன்ற 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு எஸ்.எஸ்.சி (Staff Selection Commission) போட்டி தேர்வுகள் மூலம் பணியாளர்களை தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பத்திற்கான தகுதி: Any Degree

வயது வரம்பு: 18 வயது நிரம்பியவர்கள்

விண்ணப்பத்திற்கான கடைசி நாள்: 08.10.2022

முழு விவரங்களை https://ssc.nic.in என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.

மேலும், திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நுரை வழிகாட்டு மையத்தில் நேரடியாக இலவச பயிற்சி வகுப்புகள் அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ளது.

தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இலவச பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் 04175-23331 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தங்கள் பெயரை அக்டோபர் மாதம் 10-ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொண்டு பயன்பெறலாம் என திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் திரு.பா.முருகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.