பொதுமக்கள் இனிவரும் காலங்களில் பத்திரம் பதிவு செய்ய நேரில் வர வேண்டிய அவசியமில்லை.
அதேசமயம் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்த சில நிமிடங்களிலேயே ஆய்வு செய்து அந்தப் பத்திரத்தை பதிவு செய்து திருப்பி தரும் வகையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதன் முதற்கட்டமாக சோதனை முறையில் தமிழகத்தில் 5 சார் பதிவாளர் அலுவலகங்களில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தின் சோதனை முயற்சி வெற்றிபெறும் பட்சத்தில் தொடர்ந்து மற்ற அலுவலகங்களிலும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று பதிவு துறை தெரிவித்துள்ளது.