சிவராத்திரியை முன்னிட்டு அண்ணாமலையார் திருக்கோவிலில் உள்ள லிங்கோத்பவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மஞ்சள், சந்தனம், தயிர், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் நீண்ட வழியில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.







