திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு, பெரிய நந்தி பகவானுக்கு அனைத்து விதமான காய்கறிகள் மற்றும் பழ வகைகளால் அலங்கரித்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.



