தமிழகத்தில் 5 நாட்களுக்கு பிறகு அனைத்து வழிபாட்டு தலங்களும் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 4 நாட்களாக கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மூடப்பட்டு இருந்த நிலையில், இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்திலேயே, எளிமையாக தீர்த்தவாரி நடைபெற்றது!
2-ம் ஆண்டாக அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்திலேயே நடத்த கோவில் நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி காலையில் கோவிலில் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சாமிக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் மேளதாளங்கள் முழங்க 3-ம் பிரகாரத்தில் இருந்து 5-ம் பிரகாரத்திற்கு சாமி எழுந்தருளினார். தென்பெண்ணையாற்றில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர், அன்னதான கூடம் அருகில் வைத்து சாமியின் சூலரூபமான அஸ்திரதேவருக்கு மங்கல வாத்தியங்கள் முழங்க தீர்த்தவாரி செய்யப்பட்டது. தொடர்ந்து […]
பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை: வெறிச்சோடியது கிரிவலப்பாதை!
கொரோனா தொற்று பரவலால் இந்த தை பவுர்ணமி கிரிவலத்துக்கு மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று அதிகாலையில் இருந்து, போலீசார் கிரிவலப்பாதையில் உள்ள முக்கிய சாலை சந்திப்பு பகுதிகளில் தடுப்புகள் அமைத்து பக்தர்கள் கிரிவலப்பாதையில் செல்லாமல் இருக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கிரிவலம் செல்ல வந்த பக்தர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். கிரிவலப்பாதையில் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள், தங்களது அடையாள அட்டையை போலீசாரிடம் காண்பித்து சென்றனர். பக்தர்கள் கூட்டமின்றி கிரிவலப்பாதை வெறிச்சோடி காணப்பட்டது. […]
இனி வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம் நடைபெறும்!
2 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு 39 வாரங்கள் (அ) 9 மாதங்கள் முடிவடைந்த பின் பூஸ்டர் டோஸ் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இனி வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம் நடைபெறும். – அமைச்சர் மா. சுப்பிரமணியன்
தமிழகம் முழுவதும் இனி.. வீட்டிலிருந்தே பத்திரம் பதிவு செய்யலாம்!
பொதுமக்கள் இனிவரும் காலங்களில் பத்திரம் பதிவு செய்ய நேரில் வர வேண்டிய அவசியமில்லை. அதேசமயம் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்த சில நிமிடங்களிலேயே ஆய்வு செய்து அந்தப் பத்திரத்தை பதிவு செய்து திருப்பி தரும் வகையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதன் முதற்கட்டமாக சோதனை முறையில் தமிழகத்தில் 5 சார் பதிவாளர் அலுவலகங்களில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தின் சோதனை முயற்சி வெற்றிபெறும் பட்சத்தில் தொடர்ந்து மற்ற அலுவலகங்களிலும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று […]
திருவண்ணாமலை அருள்மிகு ஶ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் – திருவூடல் உற்சவம் 2022!
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் திருவூடல் விழாவில் அருள்மிகு ஶ்ரீ அண்ணாமலையார், அருள்மிகு ஶ்ரீ பராசக்தி, ஶ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார், திருமாடவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் காட்சி கொடுத்தார். [siteorigin_widget class=”WP_Widget_Media_Gallery”][/siteorigin_widget]
10 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விடுமுறை!
10 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் 31ம் தேதி வரை விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு. 10 மற்றும் 12ம் வகுப்புக்கு வரும் 19ம் தேதி தொடங்கவிருந்த தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் – திருவூடல் மகா உற்சவம்!
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருகோயில் திருவண்ணாமலை திருவூடல் மகா உற்சவம்! வைபவம் அண்ணாமலையார் அலங்காரம் (15.01.2022) [siteorigin_widget class=”WP_Widget_Media_Gallery”][/siteorigin_widget]
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் மாட்டுப்பொங்கல் விழா முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம்!
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் (15.01.2022) மாட்டுப்பொங்கல் திருக்கோயில் ஐந்து பிரகாரகங்களில் அமைந்துள்ள நந்திகளுக்கு சிறப்பு அலங்காரம் தீபாரதனை. அனைத்து நந்திகளுக்கும் அருள்மிகு (பெரிய நாயகர்) அண்ணாமலையார் பராசக்தி அம்மன் காட்சி அளித்தனர். [siteorigin_widget class=”WP_Widget_Media_Gallery”][/siteorigin_widget]
தைப் பொங்கல் வைக்க நல்ல நேரம் எப்போது?
தமிழர்களின் முக்கிய பாரம்பரிய பண்டிகையாக தைத்திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கல் வைப்பதற்கு நல்ல நேரம் குறித்து இங்கே பார்க்கலாம். பொங்கல் நாளன்று நல்ல நேரம் என்ன? தைப் பொங்கல் வைக்க நல்ல நேரம் (14.01.2022 – தை 01 – வெள்ளிக்கிழமை): மதியம் 12.00 – 01.30 வரை மாலை 04.30 – 06.00 வரை மாட்டுப் பொங்கல் பூஜை செய்ய நல்ல நேரம் (15.01.2022 – தை 02 – சனிக்கிழமை) : காலை […]
வாட்ஸ்அப் மூலம் கோவிட் தடுப்பூசி சான்றிதழை டவுன்லோடு செய்வது எப்படி?
கோவிட் – 19 தடுப்பூசி சான்றிதழை வாட்ஸ்அப் மூலம் பதிவிறக்கம் செய்வது எப்படி? STEP 1: முதலில் +91 9013151515 என்ற எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, பிறகு உங்களுடைய வாட்ஸ்அப்பில் இருந்து அந்த எண்ணுக்கு ` Certificate ‘ என்ற மெசேஜ் அனுப்ப வேண்டும். CoWIN இணையதளத்தில் நீங்கள் கொடுத்திருக்கும் உங்கள் பதிவு எண், உங்கள் WhatsApp எண்ணாக இருக்க வேண்டும். STEP 2: நீங்கள் செய்தியை அனுப்பியதும், கொரோனா வைரஸ் தொடர்பான தலைப்புகளின் பட்டியலை […]
வைகுண்ட ஏகாதசி: அருணாசலேசுவரர் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் சொர்க்க வாசல் திறப்பு!
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று (13.01.2022) அதிகாலை நடை திறக்கப்பட்டது. பின்னர் அருணாசலேஸ்வரருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து காலை சுமார் 5.30 மணியளவில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். [siteorigin_widget class=”WP_Widget_Media_Gallery”][/siteorigin_widget]
பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களின் கவனத்திற்கு!
பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கான அபராதத் தொகை ₹200 லிருந்து ₹500 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள்-தேசிய இளைஞர் தினம்..!
சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்திய இளைஞர்களின் மனதை பக்குவப்படுத்தி, தேச வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த சக்தியாக மாற்றியமைக்கும் நோக்கில் கொண்டாடப்படும். இந்த விழா, சமூக ஒருங்கிணைவு மற்றும் அறிவுசார் மற்றும் கலாச்சார ஒருமைப்பாட்டுக்கான நடவடிக்கைகளில் ஒன்றாகும். 1893 ஆம் ஆண்டு சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய இவரது சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது. இவரது பிறந்த நாளை இந்திய அரசாங்கம் 1984 ஆம் ஆண்டு தேசிய இளைஞர் தினமாக அறிவித்தது. 1985 ஆம் […]
சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைநிலை கல்வி தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைநிலை கல்வி தேர்வு முடிவுகள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இளநிலை, முதுநிலை, எம்.பி.ஏ., – எம்.சி.ஏ., – எம்.எஸ்சி., ஐ.டி. படிப்புகளுக்கான தேர்வு முடிவுகளை http://ideunom.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட ஆட்சியர் முருகேஷ் வேண்டுகோள்!
திருவண்ணாமலை மாவட்டத்தில் புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட வேண்டும் என பொதுமக்களுக்கு ஆட்சியர் திரு.பா. முருகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லாத பொருட்களை எரித்து பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகிப் பண்டிகையை கொண்டாடி வந்தனர். ஆனால் தற்போது போகிப் பண்டிகையின்போது பழைய பிளாஸ்டிக், டயர்கள், ரசாயன கலந்த பொருட்கள் எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவது மட்டுமின்றி […]
கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வுக்கு விண்ணப்பிக்க
தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு (NMMS) மார்ச் 5ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பங்களை ஜன.12(இன்று) முதல் ஜன.27ம் தேதி வரை http://dge.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். நிரப்பப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50ஐ சேர்த்து தாம் பயிலும் பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஜன.27ம் தேதிக்குள் சமர்ப்பிக்க […]
உத்தராயண புண்ணிய கால பிரம்மோற்சவ விழா 2022 :
அண்ணாமலையார் திருக்கோவிலில் கடந்த ஜனவரி 5ஆம் நாள் கொடியேற்றத்துடன் துவங்கிய உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவம் விழாவில், விநாயகர் மற்றும் சந்திரசேகரர் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். [siteorigin_widget class=”WP_Widget_Media_Gallery”][/siteorigin_widget]
பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்பவர்கள் காவல் நிலையத்தில் தகவல் தெரிவியுங்கள்!
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் பொங்கல் பண்டிகைக்காகவோ அல்லது இதர அவசியத் தேவைகளுக்காகவோ வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றால், தயவுசெய்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது ஹலோ திருவண்ணாமலை போலீஸ் 9988576666 என்ற எண்ணிற்கோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும். குறிப்பிட்ட பகுதியில் ரோந்து காவலர்கள் மூலம் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு குற்றங்கள் நடைபெறுவது முன்கூட்டியே தடுக்கப்படும் என திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார்,இ.கா.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 15-ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது. அடுத்த வாரம் சனிக்கிழமை வழக்கம் போல் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.