காய்ச்சல், சளி, உடல் வலி உள்ளவர்கள் கொரோனா பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஜன.31 வரை இரவு நேர ஊரடங்கு நீட்டிப்பு:
14-01-2022 முதல் 18-01-2022 வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை. 16-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு. பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பொதுமக்கள் நலன் கருதி பொது பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 75% மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். தற்போது ஊரடங்கு காலங்களில் தடை செய்யப்பட்ட மற்றும் அனுமதிக்கப்பட்ட இதர செயல்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும்.
பொங்கலுக்கு பிறகு முழு ஊரடங்கு அவசியமில்லை!
தமிழ்நாட்டின் முழு ஊடகங்களுக்கு அவசியமில்லை; மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், கொரானா கட்டுப்பாடு விதிமுறைகள் கடைபிடித்து மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்பதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நோக்கம். – மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
ஜனவரி 17ம் தேதி திங்கள்கிழமை அரசு விடுமுறை!
வரும் ஜனவரி 17ம் தேதி திங்கள்கிழமை அரசு விடுமுறை. – தமிழக அரசு அறிவிப்பு
நற்செய்தி!…. முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!
முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அதிக சிகிச்சை வசதியுடன் மேலும் 5 ஆண்டுக்கு நீட்டித்து, யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம், தமிழக அரசு இடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. முதலமைச்சரின் விரிவான மருத்துவத் திட்டம், பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. தற்போது செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் இம்மாதம் முடிவு பெறுகிறது. இந்நிலையில், ஏழை எளிய மக்கள் கூடுதல் பயன்பெறும் வகையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் […]
திருச்செந்தூர் முருகன் கோவிலில் நேரக் கட்டுப்பாடு- கோவில் நிர்வாகம் அறிவிப்பு
திருச்செந்தூர் முருகன் கோவிலில் கொரானா பரவல் காரணமாக நேரக் கட்டுப்பாடு கோவில் நிர்வாகம் அறிவிப்பு, காலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி நேரம், பக்தர்கள் கடற்கரைக்கு செல்ல தடை
ஊரடங்கு குறித்த சந்தேகங்களுக்குத் தீர்வு காண 24 மணி நேரமும் இயங்கும் அலைபேசி எண்கள் அறிமுகம்!
ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து பொதுமக்களின் சந்தேகங்களுக்குத் தீர்வு காண 4 அலைபேசி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா பரவல் அதிகரித்ததால் தமிழகத்தில் தினமும் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கும் அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு குறித்த சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளை மக்கள் பெறுவதற்காக 24 மணி நேரமும் இயங்கும் 94981-81236, 94981-81239, 72007-06492, 72007-01843 ஆகிய 4 அலைபேசி எண்களை சென்னை காவல்துறை அறிமுகப்படுத்தி உள்ளது. இது தவிர அவசர உதவி தேவைப்படுவோர் காவல்துறை உதவி […]
தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களின் தேர்வுகளும் ஒத்திவைப்பு!
தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களின் தேர்வுகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திங்கள்கிழமை தெரிவித்தார். இந்நிலையில், அமைச்சர் பொன்முடி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் தேர்வுகளும் கரோனா பரவல் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்படுகிறது. எழுத்துத் தேர்வுகள் மட்டுமே ஒத்திவைக்கப்படுகிறது. செய்முறைத் தேர்வுகள் தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மெகா தடுப்பூசி முகாம் மூலம் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிக்கூடங்கள் என மக்கள் வசதிக்கேற்ற இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று இரவு 7. 30 மணி நிலவரப்படி 3, 062 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுவரை மாவட்டத்தில் முதல் டோஸ் தடுப்பூசி 11, 84, 666 பேருக்கும், இரண்டாவது டோஸ் தடுப்பூசி 8, 92, 273 பேருக்கும், […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்!
“பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 11-ம் தேதி முதல் 13ம் தேதி வரை சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் 4,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன” – போக்குவரத்துத்துறை அறிவிப்பு
திருவண்ணாமலையில், பூஸ்டர் தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் முருகேஷ்
இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி பணி தொடங்கியது. அதனை ஆட்சியர் பா.முருகேஷ் தொடங்கி வைத்தார். இதில் அரசு வழிகாட்டுதலின்படி கொரோனா இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி ஒன்பது மாதங்களுக்குப் பின்பு இந்த பூஸ்டர் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம் என்றும் வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டது. மேலும் தடுப்பூசி செலுத்தும் அனைத்து மையங்களிலும் பூஸ்டர் தடுப்பு ஊசிக்கு தகுதியானவர்கள் செலுத்திக் கொள்ளலாம் என்றும் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி எந்த […]
பேருந்துகளின் இயக்கம் மற்றும் பொதுமக்கள் புகார் தெரிவிக்க தொடர்பு எண்கள் அறிவிப்பு!
பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்ள மற்றும் புகார் தெரிவிக்க 94450 14450, 94450 14436 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் 1800 425 6151, 044- 2474 9002 என்ற கட்டணமில்லா எண்களில் புகார் அளிக்கலாம். – தமிழக அரசு
பெயர் மாற்றம் & புல எண் மாற்றம் வழங்கும் சிறப்பு முகாம்
போளூர் கோட்டத்தில் மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்தவர்கள், விவசாயி மின் இணைப்பு தொடர்பாக பெயர் மற்றம் மற்றும் புல எண் மாற்றம் கோரும் விண்ணப்பதார்கள் வரும் 10ம் தேதி திங்கட்கிழமை காலை 9 மணி அளவில் செயற் பொறியாளர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் நேரில் வந்து பயன்பெறலாம். இந்த முகாமில் கடந்த 31.3.2018 வரை விண்ணப்பித்தவர்கள் மட்டுமே கலந்துகொள்ளலாம்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து குறைந்தது 5 ஆண்டுகள் வரை காத்திருப்போருக்கு அரசு உதவி தொகை வழங்குகிறது. 10ம் வகுப்பு பதிவு செய்தவருக்கு காலாண்டுக்கு ரூ.600, தேர்ச்சி பெற்றோருக்கு ரூ.900, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றோருக்கு ரூ.1200, பட்டம், முதுகலை பட்டம் பதிவு செய்தோருக்கு ரூ.1800 வீதம் 3 ஆண்டுக்கு வழங்கப்படும். பதிவுதாரர்கள் http://tnvelaivaaippu.gov.in இணையத்தில் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து […]
தமிழகத்தில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள்.. எதற்கெல்லாம் தடை..?? அனுமதி..???
அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் பொது மக்களுக்கு அனுமதி இல்லை. திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 100 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும். உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். அனைத்து திரையரங்குகளிலும் (Multiplex/ Cinemas/Theatres) அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் அதிகபட்சம் 50% பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்! உணவகங்கள், விடுதிகள், அடுமணைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 50% […]
திருவண்ணாமலை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை வெளியீடு : பெண் வாக்காளர்களே அதிகம்!
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இறுதி வாக்காளர் பட்டியலில் 10 லட்சத்து 27 ஆயிரத்து 340 ஆண்கள், 10 லட்சத்து 74 ஆயிரத்து 89 பெண்கள், 101 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 21,01,530 வாக்காளர்கள் உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்துக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த நவம்பர் மாதம் 1-ந் தேதி வெளியிடப்பட்டது. அதில் 20 லட்சத்து 77 ஆயிரத்து 198 வாக்காளர்கள் இடம் பெற்று இருந்தனர். அதன் பின்னர் நடந்த […]
வெங்கட்டம்பாளையம் கிராமம் மாரியம்மன் கோவில் வளாகம் “வான் உலா” நிகழ்ச்சி!
இன்று (06-01-2022) மாலை 4.00 மணி அளவில் வெங்கட்டம்பாளையம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் வளாகம் திருவெற்றியூர் அறிவியல் மன்றம் சார்பில் வான் உலா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியானது வானில் சில கிரகங்களை நமது மாணவர்களுக்குத் தொலைநோக்கி மூலம் காண்பிக்கச் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகையால் அனைத்து பள்ளி மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம். இங்ஙனம் அறம் அறக்கட்டளை பருவதமலை பாதுகாப்புக் குழு தொடர்புக்கு: 7010225707, 7010621443, 9944404348, 9884608946, 9976485051,9976227187.
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு
தமிழகத்தில் கோவிட் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனையடுத்து ஜன.10ம் தேதி வரை சில கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகள் வரவுள்ள நிலையில், பாதிப்புகள் அதிகரித்து வருவதால், தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்ராயண புண்ணிய கால பிரம்மோற்சவ கொடியேற்றம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்ராயண புண்ணிய கால பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று காலை தொடங்கியது. மூலவர், உண்ணாமுலை அம்மன் மற்றும் உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர், மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்கக் கொடி மரத்தில், மங்கள இசை ஒலிக்க மற்றும் சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது, அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தர்கள் முழக்கமிட்டனர்.
முகக்கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் திரு.முருகேஷ்
மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், அனைத்து திருவண்ணாமலை மாவட்ட பேருந்து நிலையங்களிலும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மாவட்டத்தின் அனைத்து முக்கிய இடங்களிலிலும் சோதனைகள் நடைபெற்று வருகின்றது! மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் பொது இடங்கள், மண்டபங்கள், வணிக நிறுவனங்கள், பேருந்துகளில் முக கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் திரு.முருகேஷ் எச்சரித்துள்ளார்.