தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும் நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. முக்கிய நாட்கள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல்: 28.01.2022 ( இன்று ) கடைசிநாள் : 04.02.2022 தேர்தல் நாள் : 19.02.2022 வாக்கு எண்ணிக்கை: 22.02.2022 மேயர், […]
பிரீபெய்டு திட்டங்களின் செல்லுபடி காலம் 30 நாட்களாக நிர்ணயம்!
பிரீபெய்டு திட்டங்களின் செல்லுபடி காலம் 30 நாட்களாக நிர்ணயிக்க தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் உத்தரவு.
பிப்ரவரி 1 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு – பள்ளிக்கல்வித்துறை!
தமிழகத்தில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகளை பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் திறக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு என தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாத தரிசனத்திற்கான டிக்கெட் நாளை வெளியீடு!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாத தரிசனத்திற்கான டிக்கெட் நாளை ( ஜனவரி.28 ) வெளியிடப்படுகிறது. பக்தர்கள் அனைவரும் பிப்ரவரி மாத தரிசனத்திற்கான டிக்கெட்டுகளை https://tirupatibalaji.ap.gov.in/#/login என்ற இணையதளத்தில் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். இடங்களுக்கு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது!
தமிழகத்தில் 6,999 எம்.பி.பி.எஸ். மற்றும் 1,930 பி.டி.எஸ். இடங்களுக்கு இன்று கலந்தாய்வு தொடங்குகிறது. சென்னை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் காலை 10 மணிக்கு கலந்தாய்வு தொடங்குகிறது. சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு இன்று கலந்தாய்வு நடைபெறுகிறது.
நாளை முதல் அனைத்து நாட்களிலும் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி!
நாளை முதல் அனைத்து நாட்களிலும் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி. வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது! – தமிழ்நாடு அரசு
பிப்ரவரியில் பள்ளிகளை திறக்கப் பரிந்துரை!
10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதத்தில் பள்ளிகளை திறக்கப் பரிந்துரைத்துள்ளோம். – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
சத்யா நாதெல்லா மற்றும் சுந்தர் பிச்சைக்கு பத்ம பூஷன் விருது!
மைக்ரோசாப்ட் & அல்ஃபாபெட் மென்பொருள் நிறுவனங்களின் முதன்மை செயல் அலுவலர்களான சத்யா நாதெல்லா மற்றும் சுந்தர் பிச்சைக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
1950 என்ற இலவச வாக்காளர் உதவி எண் பற்றிய விவரம்!
#GoCall | வாக்காளர் பதிவு நடைமுறை குறித்த விவரங்கள் தேவையானால் ? உங்கள் மாவட்ட STD Code – வுடன் 1950 என்ற இலவச வாக்காளர் உதவி எண்ணை பயன்படுத்தி விவரங்களை பெறலாம்.
கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்திருக்கிறது!
3 லட்சத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று எண்ணிக்கை – நேற்றைய எண்ணிக்கையை விட 50,190 வரை குறைந்திருக்கிறது. – மத்திய சுகாதாரத்துறை
தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரம் வெளியீடு !
15-18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 25.75 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது முன்களப்பணியாளர்களுக்கு 13.01 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது மருத்துவப் பணியாளர்களுக்கு 9.70 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது – சுகாதாரத்துறை
போட்டித் தேர்வு ஆர்வலர்களுக்காக கல்வித் தொலைக்காட்சியில் தனி அலைவரிசை!
அரசு பணிகளில் பணியாற்ற விரும்புவோருக்கு என போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. டிஎன்பிஎஸ்சி மற்றும் போட்டி தேர்வுக்கு தயாராவோருக்காக கல்வி தொலைக்காட்சியில் தனி அலைவரிசை உருவாக்கப்பட்டு பாடங்கள் கற்பிக்கப்படும் என கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்திருந்தது. அந்த வகையில் ஒன்றிய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்திய குடிமைப் பணித் தேர்வுகள், இந்திய பொறியியல் பணி தேர்வுகள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு தேர்வுகள் , வங்கித் தேர்வுகள் ரயில்வே தேர்வு வாரியம் நடத்தும் […]
திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறிய இளைஞர்களுக்கு வாய்ப்பு!
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2017, 2018, 2019-ஆம் ஆண்டுகளில் தங்களது வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்களுக்கு மார்ச்: 1-ஆம் தேதி வரை புதுப்பித்துக் கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள், முன்னாள் படை வீரர்கள் தங்களது வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை 1.3.2022-க்குள் புதுப்பித்துக்கொள்ளலாம். முன்னாள் படைவீரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை அணுகி புதுப்பித்துக் கொள்ளலாம், இந்தச் சலுகை ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் என்று […]
தமிழக சுகாதாரத்துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை !
தமிழக சுகாதாரத்துறையில் கிராமப்புற செவிலியர் மற்றும் ஏ.என்.எம்., பணிகளுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. காலியிடங்கள் : 39 கல்வித்தகுதி : +2 க்கு பிறகு இரண்டாண்டு ஏ.என்.எம்., படிப்பு முடித்திருக்க வேண்டும். தேர்ச்சி முறை: கல்வித்தகுதி மதிப்பெண் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி நாள் : 9-2-2022 ரூ.300/- விண்ணப்பக் கட்டணம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் கூடுதல் விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண http://www.mrb.tn.gov.in/pdf/2022/vhn_dap_200122.pdf
குட் நியூஸ். “கரோனா தொற்று வேகம் சற்று குறைகிறது “இந்தியாவின் ரிப்போர்ட் .!!
இந்தியாவில் ஒமைக்ரானால் கொரோனா தொற்றின் பாதிப்பு 3-வது அலையாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஏறிக்கொண்டே சென்றது. நேற்று முன்தினம் 3 லட்சத்து 33 ஆயிரத்து 533 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் நேற்று இந்த எண்ணிக்கை 3 லட்சத்து 06 ஆயிரத்து 064 ஆக குறைந்துள்ளது.
கலசபாக்கம் வட்டாச்சியர் அலுவலக ஊழியர்கள் 8 பேருக்கு கொரானா தொற்று!
கலசபாக்கம் தாலுகா அலுவலகத்தில் பணி புரியும் 15 பேருக்கு பிசிஆர் பரிசோதனை செய்தனர். அதன் முடிவுகள் நேற்று தெரியவந்தது. அதில் 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
1 முதல் 8-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறையை நீட்டிக்க திட்டம்!
1 முதல் 8-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாரம் விடுமுறையை நீட்டிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 2021-22-ம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு!
தமிழகத்தில் 2021-22-ம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் https://tnmedicalselection.net https://tnhealth.tn.gov.in என்ற இணையதளங்களில் இன்று மாலை வெளியீடு.
திருவண்ணாமலை பூத நாராயண பெருமாள் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் !
திருவண்ணாமலை நகரில் மத்தியில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பூத நாராயண பெருமாள் திருக்கோவில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தனமஹா சம்ப்ரோக்ஷணம் கும்பாபிஷேகம் கடந்த சனிக்கிழமை (23.01.2022 ) நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
5 வயதுக்குள் இருக்கும் குழந்தைகள் மாஸ்க் அணிய தேவையில்லை – மத்திய அரசு!
ஐந்து வயதுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு மாஸ்க் அணிய தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 6-11 வயதுக்குள் இருக்கும் குழந்தைகள் பெற்றோர் மேற்பார்வையின் கீழ் பாதுகாப்பாக மாஸ்க் அணியலாம் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.