இன்று (06-01-2022) மாலை 4.00 மணி அளவில் வெங்கட்டம்பாளையம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் வளாகம் திருவெற்றியூர் அறிவியல் மன்றம் சார்பில் வான் உலா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியானது வானில் சில கிரகங்களை நமது மாணவர்களுக்குத் தொலைநோக்கி மூலம் காண்பிக்கச் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகையால் அனைத்து பள்ளி மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம். இங்ஙனம் அறம் அறக்கட்டளை பருவதமலை பாதுகாப்புக் குழு தொடர்புக்கு: 7010225707, 7010621443, 9944404348, 9884608946, 9976485051,9976227187.
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு
தமிழகத்தில் கோவிட் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனையடுத்து ஜன.10ம் தேதி வரை சில கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகள் வரவுள்ள நிலையில், பாதிப்புகள் அதிகரித்து வருவதால், தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்ராயண புண்ணிய கால பிரம்மோற்சவ கொடியேற்றம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்ராயண புண்ணிய கால பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று காலை தொடங்கியது. மூலவர், உண்ணாமுலை அம்மன் மற்றும் உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர், மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்கக் கொடி மரத்தில், மங்கள இசை ஒலிக்க மற்றும் சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது, அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தர்கள் முழக்கமிட்டனர்.
முகக்கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் திரு.முருகேஷ்
மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், அனைத்து திருவண்ணாமலை மாவட்ட பேருந்து நிலையங்களிலும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மாவட்டத்தின் அனைத்து முக்கிய இடங்களிலிலும் சோதனைகள் நடைபெற்று வருகின்றது! மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் பொது இடங்கள், மண்டபங்கள், வணிக நிறுவனங்கள், பேருந்துகளில் முக கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் திரு.முருகேஷ் எச்சரித்துள்ளார்.
திருவண்ணாமலையில் கொரோனா விதிகளை மீறினால் அபராதம்: ஆட்சியர் எச்சரிக்கை
திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா தொற்று நடைமுறைகளை பின்பற்றப்படாமல் இருந்தால் அபராதம் வசூலிக்கப்படும் என முருகேஷ் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்!
பொங்கல் தொகுப்பு டோக்கன் கிடைக்காதவர்கள் ரேஷன் கடைக்கு எப்போது போகலாம்?
இன்று முதல் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வினியோகிக்க இருப்பதன் காரணமாக பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரேஷன் கடைகளுக்கு தினமும் 150 முதல் 200 பேர் மட்டும் பரிசு பொருட்களை வாங்க வரும் வகையில் திட்டமிட்டு, அதற்கான தேதியுடன் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இன்று துவங்கும் இந்த பணி பொங்கல் வரை நடைபெற இருக்கிறது. டோக்கன் வாங்க தவறியவர்கள் மற்றும் டோக்கனில் உள்ள தேதி குறிப்பிட்ட தினத்தில் பொருட்கள் வாங்க முடியாதவர்கள், […]
போளூரில் அனுமன் ஜெயந்தி விழா!
போளூரில் அனுமன் ஜெயந்தியையொட்டி முன்னிட்டு ஸ்ரீ ராமபக்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 45 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலைக்கு கிரேன் மூலம் வடமலை,சாத்துக்கொடி மாலை, துளசி மாலைகள் அணிவிக்கப்பட்டது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானமும், மாலையில் பக்தர்களுக்கு ஆஞ்சநேயருக்கு அணிவித்த வடமாலையும், சாத்துக்கொடி மாலையும் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்பட்டது. ஆஞ்சநேயர் கோவிலைச் சுற்றி அகல் விளக்கு தீபங்களை ஏற்றி பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆஞ்சநேயரை வழிபட்டார்கள்