பௌர்ணமி அன்று அன்னதானம் செய்ய விரும்பும் தனி நபர்கள், தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் பின்பற்ற வேண்டிய நிபந்தனைகள்:
-
- எந்த காரணத்தை முன்னிட்டும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது.
-
- அன்னதானம் வழங்க இலையாளான தொன்னை மற்றும் பாக்கு மட்டை பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
-
- பிளாஸ்டிக் பாக்கெட் மூலம் குடிநீர் விநியோகிக்க கூடாது.
-
- அன்னதானம் வழங்கும் இடத்திலேயே உணவருந்தி பயன்படுத்திய பொருட்கள், மீந்து போன உணவுப் பொருட்கள் போட ஏதுவாக குப்பை கூடைகளை அன்னதானம் அளிப்பவர்களே எடுத்து வர வேண்டும்.
-
- சுத்தமானதாகவும் தரமானதாகவும் உள்ள உணவு மற்றும் இதர பொருட்களைக் கொண்டு அன்னதானம் செய்ய தயார் செய்ய வேண்டும்.
-
- அன்னதானம் முடிந்தவுடன் அந்த இடத்தினை முழுமையாக சுத்தம் செய்த பின்னரே செல்ல வேண்டும்.
- அனுமதி அளிக்கப்பட்ட இடம் தவிர வேறு இடங்களில் அன்னதானம் அளிப்பவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.