ஓய்வூதியதாரர்களுக்கு வீடு தேடி வரும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ்!

மாநில அரசு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை தங்களின் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் தபால்காரர்கள் மூலம் தங்கள் வீட்டு வாசலிலேயே சமர்ப்பிப்பதற்கு இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்பட்டு வரும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியும், தமிழக அரசும் இணைந்து ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்த சேவை பெறுவதற்கு ஓய்வூதியதாரர்கள் ஆதார் நகல், மொபைல் எண், பி.பி.ஓ. எண், ஓய்வூதிய கணக்கு விபரங்கள் ஆகியவற்றை தபால்காரரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

பின்னர் கைவிரல் ரேகை பதிவு செய்தால் ஒரு சில நிமிடங்களின் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை எளிதில் சமர்ப்பிக்க முடியும்.
ஓய்வூதியதாரர்கள் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளலாம் என அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஆர்.அமுதா அவர்கள் தெரிவித்துள்ளார்.

உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய – வாட்சாப் எண் : 8098796304

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.