கொரோனா குறைந்து வரும் நிலையில் மீண்டும் திருப்பதியில் இலவச தரிசனத்திற்கான டிக்கெட்டுகளை மக்களுக்கு நேரடியாக வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
தினமும் 15 ஆயிரம் இலவச தரிசன டோக்கன் பக்தர்களுக்கு வழங்கப்படும் என்றும் ஆதார் அட்டையை கொண்டு வந்து பக்தர்கள் இந்த வசதிகளைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
நிவாசம் விடுதி, கோவிந்தராஜர் சத்திரம் மற்றும் பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய 3 இடங்களில் தனி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு டிக்கெட் விநியோகம் செய்யப்படுகிறது.