திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் அண்மையில் மேற்கொண்ட களஆய்வில் போளூர் வட்டம் எடப்பிறையில் உள்ள வேடியப்பன் கோயிலில் பல்லவர் கால நடுகல், பாண்டியர் கால கல்வெட்டு மற்றும் ஒரு பெண் கற்சிலையும் அமைந்துள்ளதை கண்டறிந்தனர்.
நடுகல்லில் கல்வெட்டுகள் ஏதும் இல்லை. நடுகல்லில் அழகான வீரன் உருவம் மீசை வைத்த முகம், வலது கையில் வாளும் இடது கையில் வில்லும் கொண்டு போரிடுவது போல காட்சியளிக்கிறது. நீண்ட சடைமுடியும் இடைக்கச்சை உடுப்பும் அணிந்துள்ளார்.
[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய – வாட்சாப் எண் : 8098796304