திருவண்ணாமலை அரசு மாதிரி மேல்நிலைப்‌ பள்ளியில்‌ மாணவர்களுக்கு கையடக்க கணினியை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்!

திருவண்ணாமலை நகராட்சியில்‌ உள்ள சண்முகா தொழிற்‌சாலை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில்‌ உண்டு உறைவிட வசதியோடு பிளஸ்‌-2 படித்து வரும்‌ 30 மாணவ, மாணவிகளுக்கு இணைய வழி வகுப்பு மற்றும் தேர்வு பயன்பாட்டுக்காக கையடக்க கணினி வழங்கும்‌ நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில் மாவட்ட ஆட்சியர் திரு பா.முருகேஷ்‌ அவர்கள் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு கையடக்க கணினியை வழங்கினார்‌. தொடர்ந்து அவர்‌ மாதிரி பள்ளியில்‌ பயின்று வரும்‌ மாணவ, மாணவிகள்‌ நுழைவுதேர்வுக்கு எவ்வாறு தயாராக வேண்டும்‌ மற்றும் அதற்கான வழிமுறைகளையும்‌ தெளிவாக விளக்கி கூறினார்‌.

மாதிரி பள்ளியில்‌ மாணவர்‌களுக்கு வழங்கப்படும்‌ அனைத்து தேவைகளையும்‌, தங்கும்‌ வசதி, கழிப்பிட வசதி, உணவுகளின்‌ தரம்‌ பற்றியும்‌ மாணவ, மாணவிகளிடம்‌ நேரடியாக கேட்டறிந்தார்‌.

எந்த தேவைகள் இருந்தாலும் கேளுங்கள்‌ தேவைகள்‌ அனைத்‌தும்‌ உடனடியாக செய்து தரப்படும்‌ என்று கலெக்டர்‌ மாணவர்களிடம்‌ கூறினார். இதில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் காளிதாஸ், தலைமை ஆசிரியர் ராமதாஸ், ஒருங்கிணைப்பாளர் பிரசன்னா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.