நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்ய முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம். விவசாயிகள் தங்களது அறுவடை நெல்லை நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய விவசாயிகள் தங்கள் விவரங்களை www.tncsc.tn.gov.in மற்றும் www.tncsc-edpc.in ஆகிய இணையதளத்தின் மூலம் எளிய முறையில் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் உள்ள உழவர் நுழைவு பகுதியில் விவசாயிகள் தொலைபேசி எண்ணைப்பதிவு செய்து கடவுச்சொல் பெற்றபின் விவசாயின் பெயர், ஆதார் எண், நிலத்தின் வகை, சர்வே எண், அடங்கல், இருப்பிட விவரம், நெல்லின் வகை, எதிர்பார்க்கப்படும் மகசூல், விற்பனை செய்ய விரும்பும் தேதி, வங்கிகணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.