போளூர் வட்டம் கீழ்ப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் ஆலயத்தில் கூழ்வார்த்தல் மற்றும் சிரசு ஏறுதல் திருவிழாவிற்கான காப்பு கட்டுதல் நிகழ்ச்சி மே-19ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற்றதை அடுத்து இன்று (26.05.2023) வெள்ளிக்கிழமை காலையில் பூங்கரகம் எடுத்தல் மற்றும் கூழ்வார்த்தல் திருவிழா நடைபெற்று வருகிறது.
மேலும் மாலை 6 மணிக்கு மேல் பாட்டுமன்றம், வான வேடிக்கை, கரகாட்டம், பம்பை, சிலம்பாட்டம், தவில் மற்றும் நாதஸ்வர வாத்தியத்துடன் ஸ்ரீ கெங்கையம்மன் புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி மற்றும் நாளை (27.05.2023) சனிக்கிழமை காலை 10 மணிக்கு மேல் சிரசு ஏறுதல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]