தொழில் முனைவர்களாலேயே இந்த உலகம் தொய்வில்லாமல் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கின்றது…
தொழில்முனைவர்களின் சிந்தனை விதைகளில் விளைந்த விருட்சமே பல்வேறு நிறுவனங்களாக, தொழிலாக உருவெடுத்து ஒரு நாட்டின் பெரும்பான்மையானவர்களின் பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் உயர்த்துகிறது…
அப்படியொரு தொழில்முனைப்பு சிந்தனையை இளம் நெஞ்சங்களில் விதைக்கும் முன்னெடுப்பை StatrtupTN தமிழக அரசின் அமைப்பு எடுத்துவருகிறது.
StatrtupTN அமைப்பில் மதிப்பிற்குரிய நண்பர் திரு வெங்கடேஷ் அவர்கள் முக்கிய பங்காற்றி, கல்லூரி, பல்கலை கழக மாணவர்களிடையே ஆன்றோர்களையும், சான்றோர்களையும், தொழில்முனைவோர்களையும் பங்கேற்க செய்து திறம்பட தொடர் நிகழ்வுகளை நடத்தி வருகிறார். அவருக்கு எங்களின் அன்பும் வாழ்த்தும்.
இத்தொடர் நிகழ்வாக வெள்ளிக்கிழமை (25.11.2022) 10.00 மணி அளவில் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில், மதிப்பிற்குரிய துணைவேந்தர், பேராசிரியர் Dr T ஆறுமுகம், திரு. வெங்கடேஷ் பங்கேற்று மாணவர்களிடையே சிறப்புரை ஆற்றுகின்றனர். இதில் எங்கள் சகோதரர் திரு J. செந்தில் முருகன் அவர்களும் பங்கேற்று தொழில் முனைப்பு பற்றி சிறப்புரையாற்றுகிறார். அழைத்து பங்கேற்கச்செய்யும் திரு. வெங்கடேஷ் அவர்களுக்கு எங்கள் அன்பும் நன்றியும்.