திருப்பதியில் இன்று முதல் பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகள், கேரி பேக்குகள், கவர்கள், ஷாம்பு பாக்கெட்டுகள் உட்பட அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்களையும் பயன்படுத்தவும், எடுத்துச் செல்லவும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருமலையில் உள்ள கடைகளில் இனி பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மட்கும் அல்லது காகித அட்டைகள் பயன்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன் படி, பக்தர்கள் இன்று முதல் நெகிழிப் பொருட்கள் எடுத்துச் செல்ல தேவஸ்தானம் தடை விதித்துள்ளது.