போளூர் ரயில்வே ஸ்டேஷன் ரோடில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட இந்தியன் வங்கி கிளை பேருந்து நிலையம் பின்புறம் குமரன் மருத்துவமனை அருகில் புதிய கட்டிடத்தில் இன்று முதல் செயல்பட தொடங்கியது. சென்னை கள பொது மேலாளர் எம். வெங்கடேசன் துவக்கி வைத்தார். மண்டல மேலாளர் எம். அருண்பாண்டியன், துணை மேலாளர் கே. சுரேஷ், கிளைமேலாளர் எஸ் அருண் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
December 21, 2024