பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் மூலம் விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல், மணிலா, கரும்பு, எண்ணெய், வித்துக்கள் மற்றும் அனைத்து விதமான பயிர்களை காப்பீடு செய்வதன் மூலம் இயற்கை பேரிடர்களான கனமழை, வெள்ளம், வறட்சி போன்ற காலங்களில் விவசாயிகள் நஷ்டம் இல்லாமல் தங்களுடைய வாழ்வாதாரத்தை காப்பாற்றிக் கொள்ளலாம்.
இத்திட்டம் ஒவ்வொரு விவசாயியும் எக்காரணத்தைக் கொண்டும் விவசாயத்தை கைவிட்டு விடக்கூடாது என்ற உயர்ந்த நோக்கத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தினை தாங்கள் தங்களுக்கு அருகாமையில் உள்ள பொது சேவை மையத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.
விண்ணப்பிப்பதற்கான இணையத்தளம்: https://pmfby.gov.in/
தேவையான ஆவணங்கள்: சிட்டா, அடங்கல், ஆதார் கார்டு, வாங்கி கணக்கு புத்தகம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.11.2022