ரயில் டிக்கெட் இயந்திரங்களில் க்யூஆர் கோடு – இனி எளிய முறையில் கட்டணம் செலுத்தலாம்!

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் புதிய தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன இந்த தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள் மூலம் பயணிகள் டிக்கெட் எடுத்து கொள்ளும் வசதியினால் இனி டிக்கெட் எடுக்க கவுன்டரில் நீண்ட நேரம் வரிசையில் பயணிகள் காத்திருக்கத் தேவையில்லை என தெற்கு ரயில்வே கூறியுள்ளது

மேலும் ரயில்வே பயணிகள் டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தும் வசதியை விரிவுப்படுத்தி உள்ளதாகவும் அதன்மூலம் , க்யூ.ஆர். கோடு மூலம் ஏடிவிஎம் (தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள்) டிக்கெட், நடைமேடை கட்டணம் உள்ளிட்டவற்றைப் பெறலாம். சீசன் டிக்கெட்டுகள் மற்றும் ஸ்மார்ட் கார்டுகளையும் புதுப்பித்துக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் தகவல்களைபெற 139 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். க்யூ.ஆர். முறையில் டிக்கெட் பெறுவோருக்கு 0.5 சதவீதம் கட்டண சலுகையும் அளிக்கப்படுகிறது. ரயில்வே ஸ்டார்ட் கார்டு, பிஎச்எம் யுபிஐ க்யூ.ஆர். கோடு, பேடிஎம், பிஎச்எம் யுபிஐ கோடு வழியாகவும் கட்டணம் செலுத்தலாம் என தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.