போளூர் அருள்மிகு ரேணுகாம்பாள் அம்மன் திருக்கோயிலில் நவராத்திரி திருவிழா!

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் படவேட்டில் வீற்றிருக்கும் அருள்மிகு ரேணுகாம்பாள் அம்மன் திருக்கோவிலில் நிகழும் புரட்டாசி மாதம் 9-ஆம் நாள் திங்கட்கிழமை முதல் புரட்டாசி மாதம் 18 ஆம் நாள் புதன்கிழமை முடிய (26.09.2022 முதல் 05.10.2022 முடிய) 10 நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்துடன் அம்மனுக்கு உரிய நவராத்திரி திருவிழாவும், அத்துடன் லட்சார்ச்சனை விழாவும் சிறப்பாக நடைபெற உள்ளது.

பார்வதி அலங்காரம், காமாட்சி அலங்காரம், மாவடி சேலை அலங்காரம், மீனாட்சி அலங்காரம், ராஜராஜேஸ்வரி அலங்காரம், துர்காதேவி அலங்காரம், அன்னபூரணி அலங்காரம், தனலட்சுமி அலங்காரம், சரஸ்வதி அலங்காரம், திருஅவதார அலங்காரம் என 10 நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்துடன் அம்மனுக்கு பூஜை நடைபெற்று வருகின்றது.

[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.