SBI வங்கியில் 1000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு..!! மாதம் ரூ.41,000 வரை சம்பளம்..!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எஸ்பிஐ சேனல் மேலாளர் வசதியாளர், சேனல் மேலாளர் மேற்பார்வையாளர் மற்றும் சப்போர்ட் ஆபீஸர் பதவிகளுக்கு பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பதாரர்களை அழைத்துள்ளது.

ஆர்வமுள்ள விண்ணப்பத்தாரர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://sbi.co.in/ மூலம் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

பதவி பெயர் :

சேனல் மேலாளர் உதவியாளர் (CMF-AC), சேனல் மேலாளர் மேற்பார்வையாளர் (CMS-AC), துணை அதிகாரி (SO-AC)

காலிப்பணியிடங்கள் :

1,031 (சேனல் மேலாளர் உதவியாளர் – 821, சேனல் மேலாளர் மேற்பார்வையாளர் -172, துணை அதிகாரி -38)

தேர்வு செயல்முறை:

மேற்கண்ட பதவிகளுக்கு நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். முதலில், தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் ஷார்ட் லிஸ்ட் செய்யப்படுவார்கள். இதையடுத்து, வங்கியால் அமைக்கப்பட்ட ஷார்ட்லிஸ்டிங் கமிட்டி, வங்கியால் தீர்மானிக்கப்பட்ட போதுமான எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்து நேர்முகத் தேர்வுக்கு அழைப்பார்கள். நேர்முகத் தேர்வுக்கு விண்ணப்பதாரர்களை அழைப்பதற்கான வங்கியின் முடிவே இறுதியானது.

சம்பளம் :

சேனல் மேலாளர் வசதியாளர் – ரூ . 36,000
சேனல் மேலாளர் மேற்பார்வையாளர் – ரூ. 41,000
உதவி அதிகாரி – ரூ. 41,000

எப்படி விண்ணப்பிப்பது?

விண்ணப்பதாரர்கள் எஸ்பிஐ இணையதளமான https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/careers என்ற இணைப்பின் மூலம் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். ஆன்லைனில் பதிவுசெய்த பிறகு, விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பிழை இல்லாமல் நிரப்பி சமர்ப்பிக்கவும். அப்ளை செய்வதற்கான நேரடி இணைப்பை பெற இங்கே கிளிக் செய்யவும். விண்ணப்பதாரர்கள் தேவையான அனைத்து ஆவணங்களையும் (அசைன்மென்ட் விவரங்கள், அடையாளச் சான்று, வயதுச் சான்று, அனுபவம் போன்றவை) பதிவேற்றம் செய்யத் தவறினால், அவர்களின் விண்ணப்பம்/வேட்புத் தேர்வு சுருக்கப்பட்டியல்/நேர்காணலுக்கு பரிசீலிக்கப்படாது.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 30.04.2023

கடைசி நாளில் அதிகப்படியான விண்ணப்பதாரர், விண்ணப்பிக்கும்போது, இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிப்பதில் தாமதமோ அல்லது தொழில்நுட்பச் சிக்கல்களோ எழவாய்ப்புள்ளது. எனவே, விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கக் குறிப்பிட்டுள்ள கடைசிநாள் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே, போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.