திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,061 கிராமங்களில் 4.18 லட்சம் விவசாயிகளுக்கு நில உடமை பட்டா சரி பார்க்க சிறப்பு முகாம்.
ஆதார் அட்டை, நிலப்பட்டா மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் ஆகியவற்றை கொண்டு சென்று சிறப்பு முகாமில் பதிவு செய்து பயன்பெறலாம். இந்த மாத இறுதிக்குள் அடையாள எண் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.