மத்திய அரசால் பெண் குழந்தைகளுக்கு கொண்டுவரப்பட்டது சுகன்யா சம்ரிதி யோஜனா (Sukanya Samriddhi Yojana) திட்டம். இத்திட்டம் தமிழ்நாட்டில் செல்வமகள் திட்டமாக செயல்பட்டு வருகிறது. பத்து வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகள் பெற்றோர் அல்லது காப்பாளர் உதவியுடன் இந்த கணக்கை அனைத்து அங்கங்களிலும் குறிப்பிட்ட வங்கிகளிலும் துவங்க முடியும்.
செல்வ மகள் திட்டம் என்பது இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் ஜனவரி 22ம் தேதி 2015ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இது பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கான ஒரு சேமிப்பு திட்டம் ஆகும்.
செல்வமகள் சேமிப்பு திட்டம் ஒரு குடும்பத்தில் இருந்து இரண்டு பெண் குழந்தைகளுக்கு இந்த கணக்கை துவங்க இயலும் 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர்களால் கணக்கை துவங்க இயலும்.
இந்த திட்டத்தின்படி 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் பெயரில் அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் குறைந்த பட்சமான தொகையாக ரூ.250 செலுத்தி அஞ்சலகங்களில் அல்லது வங்கிகளில் கணக்கை தொடங்கலாம்.
செல்வமகள் சேமிப்பு திட்டம் ஒவ்வொரு நிதி ஆண்டிலும் குறைந்தபட்சமாக ரூ.250 கணக்கில் செலுத்தப்பட வேண்டும் மொத்தமா 14 ஆண்டுகள் அல்லது பெண்ணுக்கு திருமணம் ஆகும் வரை பணம் செலுத்தலாம். 250 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 1,50000 ரூபாய் வரை வைப்புத் தொகையாக செலுத்தலாம். ஆண்டுக்கு 7.6% வட்டி வழங்கப்படுகிறது.
இந்த கணக்கு உள்ளவர்கள் எல்லா மாதம் 10ஆம் தேதிக்குள் தவணையை கணக்கில் முதலீடு செய்ய வேண்டும். செல்வமகள் சேமிப்பு திட்டம் மூலம் குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சம் வருடத்திற்கு ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்ய இயலும் எனினும் அதிகப்படியான தொகையை செலுத்தும் போது அந்த தொகைக்கு வட்டி மற்றும் லாபம் ஏதும் இல்லை. கூடுதலாக டெபாசிட் செய்த தொகையை எப்போது வேண்டும் என்றாலும் திரும்ப பெறலாம்.
செல்வ மகள் ஸ்கீம் இன் இடை நிறுத்தப்பட்டு இருக்கும்போது ரூ.50 அபராதம் செலுத்திவிட்டு விடுபட்ட கணக்கினை மீண்டும் துவங்கலாம்.