சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்திய இளைஞர்களின் மனதை பக்குவப்படுத்தி, தேச வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த சக்தியாக மாற்றியமைக்கும் நோக்கில் கொண்டாடப்படும். இந்த விழா, சமூக ஒருங்கிணைவு மற்றும் அறிவுசார் மற்றும் கலாச்சார ஒருமைப்பாட்டுக்கான நடவடிக்கைகளில் ஒன்றாகும்.
1893 ஆம் ஆண்டு சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய இவரது சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது. இவரது பிறந்த நாளை இந்திய அரசாங்கம் 1984 ஆம் ஆண்டு தேசிய இளைஞர் தினமாக அறிவித்தது. 1985 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் தேசிய இளைஞர் நாளாக கொண்டாடப்படுகிறது.