திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அக்னி நட்சத்திர நிறைவையொட்டி, உண்ணாமுலை அம்மன் சன்னதி முன் தோஷ நிவர்த்தி பூஜையில் 1008 கலசம் வைத்து சிறப்பு யாகம் நடந்தது. மே 4-ஆம் தேதி தொடங்கி மே 28-ஆம் தேதி வரை தொடர்ந்து 25 நாட்களுக்கு அக்னி நட்சத்திர காலம் என்றழைக்கப்படும். அக்னி நட்சத்திரம் நாளையுடன் நிறைவு பெற உள்ள நிலையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் 1008 கலசாபிஷேக யாகம் நேற்று (26.05.2022) மாலை முதல் துவங்கியது.
இதனைத் தொடர்ந்து இன்றும், அக்னி நட்சத்திரம் முடிவு நாளான நாளையும் காலையில் யாகம் நடத்தப்பட்டு கலசங்களில் உள்ள புனித நீர் மூலம் அருணாச்சலேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து இரவு சுவாமி வீதி உலா நடைபெறும்.
[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]