திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா வெகு விமரிசையாக நடந்து வருகின்றது.
இந்நிலையில் கார்த்திகை தீபத் திருவிழாவின் 7ம் நாளான இன்று (03.12.2022) காலை 05:30 மணி முதல் விருச்சிக லக்கினத்தில் விநாயகர் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.
பக்தர்கள் 2 ஆண்டுகளுக்கு பின் உற்சாகத்துடன் அரோகரா கோஷத்துடன் தேர்களை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.
காலை விநாயகர் தேரை வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி தொடங்கியது.
முதலில் விநாயகர் தேரும், அதைத்தொடர்ந்து முருகர் தேரும் வீதிஉலா வந்தது.
2 தேர்களும் நிலைக்கு வந்ததும் பெரியதேர் (சாமி தேர்) இழுக்கப்படுகிறது. இதில் ஆண்கள் ஒருபுறமும், பெண்கள் ஒருபுறபும் நின்று அணிவகுத்து தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.
தேரோட்டத்தையொட்டி மாடவீதிகள் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருவண்ணாமலையில் தேரோட்டத்தையொட்டி ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.