கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த பொது இடங்களில் முகக்கவசம் அணியவும் , சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பொது மக்கள்நக்கூடும் இடங்களில், அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ . 500 அபராதம் விதிக்கப்படும்.
அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரிபவர்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிகள் முகக்கவசம் அணிய வேண்டும்.
வணிக நிறுவனங்களிலும் முகக்கவசம் அணிந்து கடைக்கு வர வேண்டும் என வாடிக்கையாளர்களை அறிவுறுத்த வேண்டும். ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருந்தால், அவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்து கொள்ள வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.