திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், அவர்கள் தலைமையில் நேற்று (02.04.2025) போளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் போளூர் மற்றும் ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

