தமிழக அரசுத்துறைகளில் வரும் 2022-ஆம் ஆண்டில் நடத்தப்பட இருக்கும் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணை கடந்த வாரத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தேர்வுகள் மூலம் 11,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக தேர்வு வாரியம் தகவல் அளித்துள்ளது. இதில் குரூப் 4 போட்டிக்கான அறிவிப்புகள் அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது குரூப்-4 பிரிவில் 5,244 காலிப்பணியிடங்கள் இருக்கும் நிலையில், இதற்கான போட்டிகள் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
பதவிகள்:
1. இளநிலை உதவியாளர்
2. தட்டச்சர்
3. சுருக்கெழுத்து தட்டச்சர்
4. கிராம நிர்வாக அலுவலர்
5. வரித்தண்டலர்
6. நில அளவர்
7. வரைவாளர்
கல்வித்தகுதி
1. இதில் தட்டச்சர் பதவிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், அரசு தொழில்நுட்ப தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம்
2. சுருக்கெழுத்தர் பதவிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயதுத்தகுதி
1. கிராம நிர்வாக அலுவலர் பணிகளில் பொது பிரிவினருக்கு 21 முதல் 30 வரையும், மற்ற வகுப்பினர்களுக்கு 40 வயது வரையும் சலுகைகள் உண்டு.
2. இளநிலை உதவியாளர் உள்ளிட்ட மற்ற பணிகளுக்கு, பொது பிரிவினருக்கு 18 வயது முதல் 30 வரையும், பிற வகுப்பினர்களுக்கு 35 வயது வரையும் சலுகை உண்டு.