போளூரில் அமைந்துள்ள ஸ்ரீலஸ்ரீ விட்டோபா சுவாமிகளின் இன்று (02.11.2023) 114வது ஆண்டு குருபூஜை மற்றும் ஆராதனை விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் சுற்று வட்டார பொதுமக்கள் மற்றும் யோகிகள், சிவனடியார்கள் திரளாக கலந்து கொண்டு ஸ்ரீலஸ்ரீ விட்டோபா சுவாமி அருளைப் பெற்றனர். அதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.