திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து குறைந்தது 5 ஆண்டுகள் வரை காத்திருப்போருக்கு அரசு உதவி தொகை வழங்குகிறது. 10ம் வகுப்பு பதிவு செய்தவருக்கு காலாண்டுக்கு ரூ.600, தேர்ச்சி பெற்றோருக்கு ரூ.900, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றோருக்கு ரூ.1200, பட்டம், முதுகலை பட்டம் பதிவு செய்தோருக்கு ரூ.1800 வீதம் 3 ஆண்டுக்கு வழங்கப்படும்.
பதிவுதாரர்கள் http://tnvelaivaaippu.gov.in இணையத்தில் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து வேலை வாய்ப்பு அலுவலரிடம் வழங்கி பயன் பெறலாம். அவ்வாறு விண்ணப்பிப்பவர்கள் உரிய சான்று நகல்கள், வங்கி சேமிப்பு கணக்கு புத்தகங்கள், உள்ளிட்ட ஆவணங்களுடன் அடுத்த மாதம் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
மாற்றுத்திறனாளிகள் குறைந்தது ஒரு ஆண்டு நிறைவு செய்தால் போதும். 10ம் வகுப்பிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.1800, பிளஸ்2 பதிவு செய்தவருக்கு ரூ.2250, பட்டதாரிகளுக்கு ரூ.3000 வீதம் 10 ஆண்டுக்கு வழங்கப்படும். ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு 45 வயதுக்கு மிகாமல், மற்ற பிரிவினர் 40 வயது மிகாமல் இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.72,000-க்கு மிகையாமல் இருக்க வேண்டும்
என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.