‘எனது வாக்கு எனது எதிர்காலம்-ஒரு வாக்கின் வலிமை’ என்ற மையக் கருத்தில் தேசிய அளவிலான போட்டியில் வினாடி-வினா போட்டி, வாசகம் எழுதும் போட்டி, பாட்டு போட்டி, காணொலி காட்சி உருவாக்கும் போட்டி மற்றும் விளம்பர படவடிவமைப்பு போட்டி என 5 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டியில் பங்கேற்பாளர்கள் விரிவான வழிகாட்டுதல்கள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை https://ecisveep.nic.in/contest/ என்ற வலைதளத்தில் பார்வையிடலாம். பங்கேற்பாளர்கள், போட்டிகள் தொடர்பான பதிவுகள் மற்றும் அதனுடைய விவரங்களை voter-contest@eci.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பங்கேற்பாளர்கள் தாங்கள் விண்ணப்பிக்க இருக்கும் போட்டியின் பெயர் மற்றும் பிரிவு ஆகியவற்றை மின்னஞ்சலின் பொருள் பகுதியில் தெளிவாக குறிப்பிட வேண்டும். போட்டிகளுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு 31-ந்தேதி (வியாழக்கிழமை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் திரு. முருகேஷ் தெரிவித்து உள்ளார்.